caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 75

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:75

وَنَزَعْنَا مِن كُلِّ أُمَّةٍ شَهِيدًا فَقُلْنَا هَاتُوا۟ بُرْهَٰنَكُمْ فَعَلِمُوٓا۟ أَنَّ ٱلْحَقَّ لِلَّهِ وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَفْتَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியாளரை (-அதன் தூதரை) நாம் கொண்டு வருவோம். பிறகு, உங்கள் ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள் என்று கூறுவோம். அவர்கள், “நிச்சயமாக உண்மை(யான ஆதாரம்) அல்லாஹ்விற்கே உரியது” என்று அறிந்து கொள்வார்கள். அவர்கள் பொய்யாக கற்பனை செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு தவறிவிடும்.
Tamil Translation - Omar Sharifஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியாளரை (-அதன் தூதரை) நாம் கொண்டு வருவோம். ஆக, (நீங்கள் இணைவைத்ததற்கு) உங்கள் ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள் என்று (அந்த சமுதாயத்திடம்) கூறுவோம். ஆக, அவர்கள், “நிச்சயமாக உண்மை(யான ஆதாரம்) அல்லாஹ்விற்கே உரியது” என்று அறிந்து கொள்வார்கள். இன்னும், அவர்கள் பொய்யாக கற்பனை செய்து (வணங்கி) கொண்டிருந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்.
Tamil Translation - Abdulhamid Baqawi75. ஒவ்வொரு வகுப்பாரிலிருந்தும் (நம் தூதர்களை) அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக அழைத்துக் கொண்டு (அவர்களை நோக்கி ‘‘ என்னையன்றி பிற படைப்புகளை தெய்வங்களென நீங்கள் கூறிக் கொண்டிருந்தீர்களே) அதற்குரிய உங்கள் அத்தாட்சிகளைக் கொண்டு வாருங்கள்'' என்று நாம் கூறும் சமயத்தில், அவர்கள் பொய்யாகக் கூறிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் மறைந்து, உண்மை(யான இறைத் தன்மை) அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானதென்பதை அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70