وَٱبْتَغِ فِيمَآ ءَاتَىٰكَ ٱللَّهُ ٱلدَّارَ ٱلْـَٔاخِرَةَ وَلَا تَنسَ نَصِيبَكَ مِنَ ٱلدُّنْيَا وَأَحْسِن كَمَآ أَحْسَنَ ٱللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ ٱلْفَسَادَ فِى ٱلْأَرْضِ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْمُفْسِدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் உமக்கு வழங்கியவற்றில் மறுமை வீட்டை தேடிக்கொள்! உலகத்திலிருந்து (மறுமைக்கு நீ எடுத்துச் செல்லவேண்டிய) உனது பங்கை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நன்மை செய்தது போன்று நீ (மக்களுக்கு) நன்மை செய்! பூமியில் குழப்பத்தை (கலகத்தை, தீமை செய்வதை, மக்களுக்கு அநீதி செய்வதை) விரும்பாதே! நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்வோரை நேசிக்க மாட்டான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ் உமக்கு வழங்கியவற்றில் மறுமை வீட்டை தேடிக்கொள்! இன்னும், உலகத்திலிருந்து (மறுமைக்கு நீ எடுத்துச் செல்லவேண்டிய) உனது பங்கை மறந்து விடாதே! இன்னும், அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போன்று நீ (மக்களுக்கு) உபகாரம் செய்! பூமியில் கெடுதியை விரும்பாதே! நிச்சயமாக அல்லாஹ் கெடுதி செய்வோரை நேசிக்க மாட்டான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi77. ‘‘ (உன்னிடம் இருக்கும் பொருள்களை எல்லாம் அல்லாஹ்வே உனக்குக் கொடுத்தான். ஆகவே) அல்லாஹ் உனக்கு கொடுத்திருப்பதில் (தானம் செய்து) மறுமை வீட்டைத் தேடிக்கொள். இம்மையில் (தானம் செய்து நீ தேடிக் கொண்டதுதான்) உன் பாகம் என்பதை நீ மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு(க் கொடுத்து) உதவி செய்தவாறு அதை(க் கொண்டு பிறருக்கு) நீயும் (தானம் செய்து) உதவி செய். பூமியில் நீ விஷமம் செய்ய விரும்பாதே! ஏனென்றால், விஷமிகளை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை'' என்றும் கூறினார்கள்.