caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 11

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:11

وَقَالَتْ لِأُخْتِهِۦ قُصِّيهِ فَبَصُرَتْ بِهِۦ عَن جُنُبٍ وَهُمْ لَا يَشْعُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவள் (-மூஸாவின் தாயார்) அவருடைய சகோதரிக்கு “நீ அவரைப் பின்தொடர்ந்து செல்” என்று கூறினாள். ஆக, அவள் அவரை தூரத்திலிருந்து பார்த்துவிட்டாள். எனினும், அவர்கள் (-ஃபிர்அவ்னின் குடும்பத்தார் இவள் அவருடைய சகோதரி என்பதை) உணரவில்லை.
Tamil Translation - Omar Sharif(-மூஸாவின் தாயார்) அவருடைய சகோதரிக்கு, “நீ அவரைப் பின்தொடர்ந்து செல்” என்று கூறினாள். ஆக, அவள் அவரை (யார் எடுக்கிறார்கள் என்பதை) தூரத்திலிருந்து பார்த்துவிட்டாள். எனினும், அவர்கள் (-ஃபிர்அவ்னின் குடும்பத்தார் அவருடைய சகோதரியாகிய இவள் அவரை கண்காணித்தவளாக பின்தொடர்கிறாள் என்பதை) உணரவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi11. (அக்குழந்தையைப் பேழையில் வைத்து ஆற்றில் விட்டதன் பின்னர்) அவள், அக்குழந்தையின் சகோதரியை நோக்கி ‘‘ (ஆற்றில் மிதந்து செல்லும்) அதைப் பின்தொடர்ந்து நீயும் செல்'' என்று கூறினாள். அவளும் அ(தனைப் பின்தொடர்ந்து சென்று அதை எடுத்த)வர்களுக்குத் தெரியாத விதத்தில் அதை(ப் பற்றி என்ன நடக்கிறதென்று) தூரத்திலிருந்தே கவனித்து வந்தாள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70