caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 10

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:10

وَأَصْبَحَ فُؤَادُ أُمِّ مُوسَىٰ فَٰرِغًا إِن كَادَتْ لَتُبْدِى بِهِۦ لَوْلَآ أَن رَّبَطْنَا عَلَىٰ قَلْبِهَا لِتَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமூஸாவின் தாயாருடைய உள்ளம் (மூஸாவின் நினைவைத் தவிர மற்ற அனைத்திலிருந்தும்) வெறுமையாக ஆகிவிட்டது. அவள் நம்பிக்கையாளர்களில் ஆகவேண்டும் என்பதற்காக அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தவில்லை யெனில் நிச்சயமாக அவள் அவரை (-மூஸாவை) வெளிப்படுத்தி இருக்கக்கூடும்.
Tamil Translation - Omar Sharifமூஸாவின் தாயாருடைய உள்ளம் (மூஸாவின் நினைவைத் தவிர மற்ற அனைத்திலிருந்தும்) வெற்றிடமாக ஆகிவிட்டது. அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தி இருக்கவில்லையெனில் நிச்சயமாக அவள் அவரை (பற்றிய செய்தியை) வெளிப்படுத்தி இருக்கக்கூடும். அவள் நம்பிக்கையாளர்களில் ஆகவேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தோம்).
Tamil Translation - Abdulhamid Baqawi10. மூஸாவுடைய தாயின் உள்ளம் (அவரை ஆற்றில் எறிந்த பின் துக்கத்தால்) வெறுமையாகி விட்டது. அவள் நமது வார்த்தையை நம்பும்படி அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தியிருக்காவிட்டால், (மூஸா பிறந்திருக்கும்) விஷயத்தை அனைவருக்கும் அவள் வெளிப்படுத்தியே இருப்பாள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70