caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naml அத்தியாயம், வசனம் 87

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 48 · 27:87

وَيَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَفَزِعَ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِى ٱلْأَرْضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُ وَكُلٌّ أَتَوْهُ دَٰخِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version‘சூர்’இல் ஊதப்படும் நாளில் வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் திடுக்கிடுவார்கள் (-பயத்தால் நடுங்குவார்கள்) அல்லாஹ் நாடியவர்களைத் தவிர (-மார்க்கப் போரில் கொல்லப்பட்டவர்களைத் தவிர அவர்களுக்கு திடுக்கம் இருக்காது). எல்லோரும் அவனிடம் பணிந்தவர்களாக வருவார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எக்காளத்தில் ஊதப்படும் நாளில் வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் (-பயத்தால் நடுங்கி) திடுக்கிடுவார்கள். ஆனால், அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. (போரில் கொல்லப்பட்டவர்களைத் தவிர அவர்களுக்கு திடுக்கம் இருக்காது.) இன்னும், எல்லோரும் அவனிடம் பணிந்தவர்களாக வருவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi87. சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவருமே திடுக்கிட்டு, நடுங்கித் தலை குனிந்தவர்களாக அவனிடம் வந்து சேருவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70