وَتَرَى ٱلْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِىَ تَمُرُّ مَرَّ ٱلسَّحَابِ صُنْعَ ٱللَّهِ ٱلَّذِىٓ أَتْقَنَ كُلَّ شَىْءٍ إِنَّهُۥ خَبِيرٌۢ بِمَا تَفْعَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நீர் மலைகளைப் பார்த்து அவற்றை உறுதியாக நிற்பதாகக் கருதுவீர். அவையோ (அந்நாளில்) மேகங்கள் செல்வதைப் போன்று செல்கின்றன. (இது) எல்லாவற்றையும் செம்மையாகச் செய்த அல்லாஹ்வின் செயலாகும். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நீர் மலைகளைப் பார்த்து அவற்றை உறுதியாக நிற்பதாகக் கருதுவீர். அவையோ (அந்நாளில்) மேகங்கள் செல்வதைப் போன்று சென்றுகொண்டிருக்கும். (இது,) எல்லாவற்றையும் செம்மையாகச் செய்த அல்லாஹ்வின் செயலாகும். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi88. நீர் காணும் மலைகளை அவை வெகு உறுதியாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். (எனினும், அந்நாளில்) அவை மேகத்தைப் போல் (ஆகாயத்தில்) பறந்தோடும். ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அதன் இயற்கை அமைப்பின் மீது உறுதிப்படுத்திய அல்லாஹ்வுடைய கட்டளையால் (அவ்வாறு நடைபெறும்). நிச்சயமாக அவன் நீங்கள் செய்து கொண்டிருக்கும் அனைத்தையும் நன்கறிபவன் ஆவான்.