أَلَمْ يَرَوْا۟ أَنَّا جَعَلْنَا ٱلَّيْلَ لِيَسْكُنُوا۟ فِيهِ وَٱلنَّهَارَ مُبْصِرًا إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَٰتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் இரவை -அதில் அவர்கள் ஓய்வு பெறுவதற்காகவும், பகலை (அவர்கள் பொருள் சம்பாதிக்க வசதியாக) வெளிச்சமாகவும் நாம் அமைத்தோம். நிச்சயமாக இதில் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நாம் இரவை -அதில் அவர்கள் ஓய்வு பெறுவதற்காகவும், பகலை (அவர்கள் பொருள் சம்பாதிக்க வசதியாக) வெளிச்சமாகவும் அமைத்திருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.
Tamil Translation - Abdulhamid Baqawi86. நிச்சயமாக நாம்தான் அவர்கள் சுகமடைவதற்கு இரவையும் (அனைத்தையும்) நன்கு பார்ப்பதற்குப் பகலையும் உண்டு பண்ணினோம் என்பதை அவர்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.