يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِيَسْتَـْٔذِنكُمُ ٱلَّذِينَ مَلَكَتْ أَيْمَٰنُكُمْ وَٱلَّذِينَ لَمْ يَبْلُغُوا۟ ٱلْحُلُمَ مِنكُمْ ثَلَٰثَ مَرَّٰتٍ مِّن قَبْلِ صَلَوٰةِ ٱلْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُم مِّنَ ٱلظَّهِيرَةِ وَمِنۢ بَعْدِ صَلَوٰةِ ٱلْعِشَآءِ ثَلَٰثُ عَوْرَٰتٍ لَّكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌۢ بَعْدَهُنَّ طَوَّٰفُونَ عَلَيْكُم بَعْضُكُمْ عَلَىٰ بَعْضٍ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْـَٔايَٰتِ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் வலக்கரங்கள் சொந்தமாகியவர்களும் உங்களில் பருவத்தை அடையாதவர்களும் காலை தொழுகைக்கு முன், மதியத்தில் (நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக) உங்கள் ஆடைகளை நீங்கள் களைந்துவிடும் நேரத்தில், இஷா தொழுகைக்கு பின் ஆகிய மூன்று நேரங்களில் (உங்கள் இல்லங்களுக்குள் நுழைய) உங்களிடம் அனுமதி கோரட்டும். இவை மூன்றும் உங்களுக்கு மறைவான நேரங்கள். இவற்றுக்குப் பின்னர் (மற்ற நேரங்களில் அனுமதியின்றி அவர்கள் நுழைவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை. அவர்கள் உங்களிடம் அதிகம் வந்துபோகக் கூடியவர்கள். உங்களில் சிலர் சிலரிடம் (வந்துபோகக் கூடியவர்கள்). இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு வசனங்களை தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களும் உங்களில் பருவத்தை அடையாதவர்களும் மூன்று நேரங்களில் (உங்கள் இல்லங்களில் நுழைய) உங்களிடம் அனுமதி கோரட்டும். அதிகாலை தொழுகைக்கு முன்; இன்னும், மதியத்தில் (நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக) உங்கள் ஆடைகளை நீங்கள் களைந்துவிடும் நேரத்தில்; இன்னும், இஷா தொழுகைக்கு பின் இவை மூன்றும் உங்களுக்கு மறைவான நேரங்கள் ஆகும். (இந்த நேரங்களில் அவர்கள் உங்களிடம் அனுமதி பெற்று உள்ளே பிரவேசிக்கவும். மற்ற நேரங்களில் அனுமதியின்றி அவர்கள் நுழைவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை. உங்களில் சிலர் சிலரிடம் அதிகம் வந்துபோகக் கூடியவர்கள் ஆவார்கள். இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு வசனங்களை தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi58. நம்பிக்கையாளர்களே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவமடையாத (சிறிய) பிள்ளைகளும் (நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்களில்) உங்களிடம் (வருவார்களாயின் உங்கள்) அனுமதியை மூன்று தடவைகள் அவர்கள் கோர வேண்டும். (அந்த நேரங்களாவன:) ‘ஃபஜ்ரு' (அதிகாலை) தொழுகைக்கு முன்னரும் (படுக்கைக்காக உங்கள் மேல் மிச்சமான) ஆடைகளைக் களைந்திருக்கக் கூடிய ‘ளுஹர்' (மதிய) வேளையிலும், ‘இஷா' (இரவு) நேரத்தில் தொழுகைக்குப் பின்னரும் ஆகிய (இம்) மூன்று நேரங்களும் நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்கள். (இவற்றைத் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் உங்கள் அனுமதியின்றியே உங்களிடம் வருவது) அவர்கள் மீது குற்றமல்ல. (ஏனென்றால்,) இவர்கள் அடிக்கடி உங்களிடம் வரக்கூடியவர்களாகவும், உங்களில் ஒருவர் மற்றவரிடம் அடிக்கடி செல்ல வேண்டியவர்களாகவும் இருப்பதனாலும் (அடிக்கடி அனுமதி கோரவேண்டிய அவசியமில்லை). இவ்வாறு அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்.