caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Noor அத்தியாயம், வசனம் 59

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 102 · 24:59

وَإِذَا بَلَغَ ٱلْأَطْفَٰلُ مِنكُمُ ٱلْحُلُمَ فَلْيَسْتَـْٔذِنُوا۟ كَمَا ٱسْتَـْٔذَنَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ ءَايَٰتِهِۦ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களின் குழந்தைகள் பருவத்தை அடைந்துவிட்டால் அவர்கள் (உங்கள் இல்லங்களில் நுழையும் போது அவர்கள்) அனுமதி கோரட்டும் அவர்களுக்கு முன்னுள்ள (வயது வந்த)வர்கள் அனுமதி கோரியது போன்று. இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு தனது வசனங்களை தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்.
Tamil Translation - Omar Sharifஉங்களில் குழந்தைக(ளாக இருப்பவர்க)ள் பருவத்தை அடைந்துவிட்டால் அவர்கள் (உங்கள் இல்லங்களில் நுழையும் போது) அனுமதி கோரட்டும் அவர்களுக்கு முன்னர் உள்ள (வயது வந்த)வர்கள் அனுமதி கோரியது போன்று. இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு தனது வசனங்களை தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi59. உங்கள் குழந்தைகள் பருவமடைந்துவிட்டால், அவர்களும் தங்களுக்கு மூத்தவர்கள் அனுமதி கோரவேண்டிய பிரகாரம் அனுமதி கோர வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஞானமுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70