فَإِن لَّمْ تَجِدُوا۟ فِيهَآ أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّىٰ يُؤْذَنَ لَكُمْ وَإِن قِيلَ لَكُمُ ٱرْجِعُوا۟ فَٱرْجِعُوا۟ هُوَ أَزْكَىٰ لَكُمْ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவற்றில் நீங்கள் ஒருவரையும் காணவில்லையெனில், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகின்ற வரை அவற்றில் நீங்கள் நுழையாதீர்கள். “திரும்பி விடுங்கள்” என்று உங்களுக்கு சொல்லப்பட்டால் (வீட்டுக்குள் நுழையாமல்) திரும்பி விடுங்கள். அது உங்க(ள் ஆன்மாக்க)ளுக்கு மிக சுத்தமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஆக, அவற்றில் நீங்கள் ஒருவரையும் காணவில்லையெனில், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகிற வரை அவற்றில் நீங்கள் நுழையாதீர்கள். இன்னும், “திரும்பி விடுங்கள்” என்று உங்களுக்கு சொல்லப்பட்டால் (வீட்டுக்குள் நுழையாமல்) திரும்பி விடுங்கள். அது உங்க(ள் ஆன்மாக்க)ளுக்கு மிக சுத்தமானதாகும். அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi28. அவ்வீட்டில் எவரையுமே நீங்கள் காணாவிடில், உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வரை அதில் நுழையாதீர்கள். ‘‘ (தவிர இச்சமயம் வீட்டில் நுழைய வேண்டாம்.) நீங்கள் திரும்பிவிடுங்கள்'' என்று (அவ்வீட்டில் இருக்கும் பெண்கள் அல்லது மற்ற எவராலும்) உங்களுக்குக் கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் (தாமதிக்காது) திரும்பி விடுங்கள். இதுவே உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.