يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَدْخُلُوا۟ بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّىٰ تَسْتَأْنِسُوا۟ وَتُسَلِّمُوا۟ عَلَىٰٓ أَهْلِهَا ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகள் அல்லாத வீடுகளில் நீங்கள் நுழையாதீர்கள், நீங்கள் அவ்வீட்டார்களுக்கு ஸலாம் கூறி, பேசி அனுமதி பெறுகின்ற வரை. (இதன்மூலம்) நீங்கள் நல்லறிவு பெறவேண்டுமே! அதுதான் உங்களுக்கு சிறந்தது.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகள் அல்லாத (பிறருடைய) வீடுகளில் நீங்கள் (அனுமதியின்றி) நுழையாதீர்கள், நீங்கள் அவ்வீட்டார்களுக்கு ஸலாம் கூறி, பேசி அனுமதி பெறுகின்ற வரை (உள்ளே செல்லாதீர்கள்). இதுதான் உங்களுக்கு சிறந்ததாகும், நீங்கள் நல்லறிவு பெறவேண்டும் என்பதற்காக.
Tamil Translation - Abdulhamid Baqawi27. நம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகள் அல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்,) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரை நுழையாதீர்கள். இவ்வாறு நடந்து கொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதை மறந்து விடாது) நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக!