caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Noor அத்தியாயம், வசனம் 29

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 102 · 24:29

لَّيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَدْخُلُوا۟ بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍ فِيهَا مَتَٰعٌ لَّكُمْ وَٱللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவசிக்கப்படாத வீடுகளில் -அவற்றில் உங்களுக்கு பொருள் இருந்து -நீங்கள் நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைப்பதையும் நன்கறிவான்.
Tamil Translation - Omar Sharifஉங்கள் பொருள் (மட்டும் வைக்கப்பட்டு) இருக்கிற (யாரும்) வசிக்காத வீடுகளில் நீங்கள் (அனுமதி இன்றி) நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. (நம்பிக்கையாளர்களே!) குடியில்லாத ஒரு வீட்டில் உங்கள் சாமான்கள் இருந்து (அதற்காக) நீங்கள் அதில் (அனுமதியின்றியே) நுழைந்தால் அது உங்கள்மீது குற்றமாகாது. நீங்கள் (உங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அல்லாஹ் நன்கறிவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70