حَتَّىٰٓ إِذَآ أَخَذْنَا مُتْرَفِيهِم بِٱلْعَذَابِ إِذَا هُمْ يَجْـَٔرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇறுதியாக, அவர்களின் சுகவாசிகளை (-செல்வமும் பதவியும் உடையவர்களை) வேதனையைக் கொண்டு நாம் பிடித்தால் அப்போது அவர்கள் கதறுகின்றனர்.
Tamil Translation - Omar Sharifஇறுதியாக, அவர்களில் (பெரும் பாவிகளாக) இருந்த சுகவாசிகளை (-செல்வமும் பதவியும் உடைய நிராகரிப்பாளர்களை) தண்டனையைக் கொண்டு நாம் பிடித்தால் அப்போது அவர்கள் (உதவி கேட்டு) கதறுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi64. ஆகவே, அவர்களின் தலைவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டாலோ, அவர்கள் (அந்நேரத்தில் திடுக்கிட்டுத் தங்களை காப்பாற்றும்படி) பயந்து சப்தமிடுகின்றனர்.