caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muminoon அத்தியாயம், வசனம் 63

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 74 · 23:63

بَلْ قُلُوبُهُمْ فِى غَمْرَةٍ مِّنْ هَٰذَا وَلَهُمْ أَعْمَٰلٌ مِّن دُونِ ذَٰلِكَ هُمْ لَهَا عَٰمِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக அவர்களது உள்ளங்கள் இதை (இந்த குர்ஆனை) விட்டு அறியாமையில் இருக்கின்றனர். அவர்களுக்கு (57லிருந்து 61வரை வர்ணிக்கப்பட்ட நல்லவர்களின் நல்ல அமல்கள் அன்றி) வேறு செயல்களும் உள்ளன. (பாவங்கள் உள்ளன) அவர்கள் அதைத்தான் செய்பவர்கள்.
Tamil Translation - Omar Sharifமாறாக, அவர்களது உள்ளங்கள் இ(ந்த வேதத்)தை அறியாமல் இருப்பதில் இருக்கின்றன. இன்னும், அவர்களுக்கு அவை அல்லாத (இறை நம்பிக்கையாளர்கள் செய்கின்ற நல்லறங்கள் அல்லாமல்) வேறு (பாவ) செயல்கள் (மட்டுமே) உள்ளன. அவர்கள் அவற்றைத்தான் செய்கிறார்கள். (அவர்கள் நல்லோர் செய்கின்ற நல்லறங்களை செய்ய மாட்டார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi63. எனினும், (நிராகரிக்கும்) அவர்களுடைய உள்ளங்கள் இ(வ்வேதத்)தைப் பற்றி (சந்தேகித்து) மடமையில் ஆழ்ந்து கிடக்கின்றன. இதையன்றி அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேறு பல (தீய)காரியங்களும் இருக்கின்றன.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70