caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muminoon அத்தியாயம், வசனம் 27

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 74 · 23:27

فَأَوْحَيْنَآ إِلَيْهِ أَنِ ٱصْنَعِ ٱلْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا فَإِذَا جَآءَ أَمْرُنَا وَفَارَ ٱلتَّنُّورُ فَٱسْلُكْ فِيهَا مِن كُلٍّ زَوْجَيْنِ ٱثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَن سَبَقَ عَلَيْهِ ٱلْقَوْلُ مِنْهُمْ وَلَا تُخَٰطِبْنِى فِى ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ إِنَّهُم مُّغْرَقُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவருக்கு நாம் வஹ்யி அறிவித்தோம். நமது கண்களுக்கு முன்னும் நமது அறிவிப்பின்படியும் நீர் கப்பலை செய்வீராக! நமது கட்டளை வந்துவிட்டால், அடுப்பு பொங்க ஆரம்பித்துவிட்டால் எல்லாவற்றிலிருந்தும் இரண்டு ஜோடிகளையும் உமது குடும்பத்தினரையும் அதில் ஏற்றுவீராக! அவர்களில் எவன் மீது (இறைவனின்) வாக்கு முந்திவிட்டதோ அவனைத் தவிர (அவனை ஏற்றாதே)! அநியாயக்காரர்கள் விஷயத்தில் என்னிடம் நீர் உரையாடாதீர். நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, அவருக்கு நாம் வஹ்யி அறிவித்தோம்: நமது கண்களுக்கு முன்பாகவும் நமது அறிவிப்பின்படியும் நீர் கப்பலை செய்வீராக! ஆக, நமது கட்டளை வந்துவிட்டால்; இன்னும், அடுப்பு பொங்க ஆரம்பித்துவிட்டால் எல்லாவற்றிலிருந்தும் இரண்டு ஜோடிகளையும் உமது குடும்பத்தினரையும் அதில் ஏற்றுவீராக, அவர்களில் எவன் மீது (இறைவனின்) வாக்கு முந்திவிட்டதோ அவனைத் தவிர. (அவனை ஏற்றாதீர்!) இன்னும், அநியாயக்காரர்கள் விஷயத்தில் (அவர்களுக்காக பரிந்து பேசி) என்னிடம் நீர் உரையாடாதீர்! நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi27. அதற்கு நாம் அவரை நோக்கி நீர் ‘‘நாம் அறிவிக்கின்றபடி நம் கண்முன் ஒரு கப்பலைச் செய்வீராக. நம் உத்தரவு ஏற்பட்டு அடுப்புப்பொங்க ஆரம்பித்தால் (ஒவ்வோர் உயிர்ப் பிராணிகளிலும்) ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜோடியையும், உமது குடும்பத்தினரையும் நீர் அதில் ஏற்றிக் கொள்வீராக. ஆயினும், எவன் மீது நம் தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவனைத் தவிர. (ஏனென்றால்,) அநியாயம் செய்பவ(ர் உங்கள் குடும்பத்தவராயினும் அவ)ரைப் பற்றி நீர் என்னிடம் ஏதும் (சிபாரிசாகப்) பேசாதீர். நிச்சயமாக அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்'' என்று வஹ்யி அறிவித்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70