caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hajj அத்தியாயம், வசனம் 36

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 103 · 22:36

وَٱلْبُدْنَ جَعَلْنَٰهَا لَكُم مِّن شَعَٰٓئِرِ ٱللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَٱذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ عَلَيْهَا صَوَآفَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا۟ مِنْهَا وَأَطْعِمُوا۟ ٱلْقَانِعَ وَٱلْمُعْتَرَّ كَذَٰلِكَ سَخَّرْنَٰهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகொழுத்த ஒட்டகங்கள் (மற்றும் மாடுகள்) அவற்றை உங்களுக்கு அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் நாம் ஆக்கி இருக்கின்றோம். அவற்றில் உங்களுக்கு நன்மைகள் உண்டு. ஆகவே, அவை (ஒருகால் கட்டுப்பட்டு மூன்று கால்கள் மீது) நின்றவையாக இருக்க அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூ(றி அ)றுங்கள். (அறுக்கப்பட்ட பின்) அவற்றின் விலாக்கள் (பூமியில்) சாய்ந்து விட்டால் அவற்றிலிருந்து சாப்பிடுங்கள், இன்னும் யாசிப்பவருக்கும் எதிர்பார்த்து வருபவருக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இவ்வாறே அதை உங்களுக்கு வசப்படுத்தித்தந்தோம்.
Tamil Translation - Omar Sharifகொழுத்த ஒட்டகங்கள், (மற்றும் மாடுகள்,) அவற்றை உங்களுக்கு அல்லாஹ்வின் (மார்க்க) அடையாள சின்னங்களில் நாம் ஆக்கி இருக்கிறோம். அவற்றில் உங்களுக்கு நன்மைகள் உண்டு. ஆகவே, அவை (ஒரு கால் கட்டப்பட்டு, மூன்று கால்கள் மீது) நின்றவையாக இருக்க அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூ(றி அ)றுங்கள். ஆக, (அவை அறுக்கப்பட்ட பின்) அவற்றின் விலாக்கள் (பூமியில்) சாய்ந்து விட்டால் அவற்றிலிருந்து சாப்பிடுங்கள்; இன்னும், யாசிப்பவருக்கும் எதிர்பார்த்து வருபவருக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இவ்வாறே அவற்றை (-கால்நடைகளை) உங்களுக்கு பணிய வைத்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. குர்பானியின் ஒட்டகத்தை அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்குத் தான் பெரும் நன்மை இருக்கிறது. ஆகவே, (அதன் இடப்பக்க முன் காலைக்கட்டி மற்ற மூன்று கால்களில்) நிறுத்தி வைத்து அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுங்கள். அது கீழே விழுந்து (உயிர்)விட்டால் அதிலிருந்து நீங்களும் புசியுங்கள். அதைக் கேட்டவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறு அதை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70