ٱلَّذِينَ إِذَا ذُكِرَ ٱللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَٱلصَّٰبِرِينَ عَلَىٰ مَآ أَصَابَهُمْ وَٱلْمُقِيمِى ٱلصَّلَوٰةِ وَمِمَّا رَزَقْنَٰهُمْ يُنفِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்களுக்கு முன்) அல்லாஹ்வை நினைவு கூரப்பட்டால் அவர்களது உள்ளங்கள் பயப்படும். அவர்களுக்கு ஏற்பட்டவற்றின் மீது (-சோதனைகளின் மீது) பொறுமையாக இருப்பார்கள். தொழுகையை நிலைநிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்.
Tamil Translation - Omar Sharif(அவர்களுக்கு முன்) அல்லாஹ்வை நினைவு கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் பயத்தால் நடுங்கும். இன்னும், அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் மீது பொறுமையாக இருப்பார்கள். இன்னும், அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். இன்னும், நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi35. அவர்கள் எத்தகையவர்கள் என்றால், அல்லாஹ்வுடைய திருப்பெயர் கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள். தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றில் தானமும் செய்வார்கள்.