وَعَلَّمْنَٰهُ صَنْعَةَ لَبُوسٍ لَّكُمْ لِتُحْصِنَكُم مِّنۢ بَأْسِكُمْ فَهَلْ أَنتُمْ شَٰكِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களை உங்கள் போரில் பாதுகாப்பதற்காக உங்களுக்காக ஆயுதங்களை செய்வதை நாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம். ஆகவே, நீங்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்துவீர்களா?
Tamil Translation - Omar Sharifஉங்களுக்காக கவச ஆடைகள் (இன்னும் ஆயுதங்கள்) செய்வதை நாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம். ஏனெனில், உங்கள் போரில் (எதிரிகளின் தாக்குதலில் இருந்து) அவை உங்களை பாதுகாக்கும். ஆக, நீங்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்துவீர்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi80. (போரில் ஈட்டி, கத்தி ஆகியவற்றின்) காயத்தில் இருந்து உங்களை பாதுகாக்கக் கூடிய கவசங்கள் செய்வதை நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களா?