فَفَهَّمْنَٰهَا سُلَيْمَٰنَ وَكُلًّا ءَاتَيْنَا حُكْمًا وَعِلْمًا وَسَخَّرْنَا مَعَ دَاوُۥدَ ٱلْجِبَالَ يُسَبِّحْنَ وَٱلطَّيْرَ وَكُنَّا فَٰعِلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதை (அந்த பிரச்சனையை) நாம் ஸுலைமானுக்கு புரிய வைத்தோம். (இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலிருந்து கூறப்பட்ட தூதர்கள்) எல்லோருக்கும் ஞானத்தையும் (-நபித்துவத்தையும் இறை சட்டங்களைப் பற்றிய) கல்வியையும் நாம் கொடுத்தோம். தாவூதுடன் மலைகளையும் பறவைகளையும் (அவை அவருடன் நம்மை) துதிக்கின்றவையாக வசப்படுத்தினோம். (இதை விதியில் முன்பே) நாம் முடிவு செய்தவர்களாக இருந்தோம்.
Tamil Translation - Omar Sharifஆக, அ(ந்த பிரச்சினைக்குரிய சட்டத்)தை நாம் சுலைமானுக்கு புரிய வைத்தோம். இன்னும், (நமது தூதர்கள்) எல்லோருக்கும் ஞானத்தையும் (நீதி தொடர்பான சட்டக்) கல்வியையும் நாம் கொடுத்தோம். இன்னும், தாவூதுடன் மலைகளையும் பறவைகளையும் (அவை அவருடன் சேர்ந்து நம்மை) துதிக்கக்கூடியவையாக அடிபணிய வைத்தோம். இன்னும், (இதை விதியில் முன்பே) நாம் முடிவு செய்தவர்களாக இருந்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi79. தீர்ப்புக் கூறுவதில் இவர்கள் இருவருக்குமே கல்வியையும் ஞானத்தையும் நாம் கொடுத்திருந்த போதிலும், ஸுலைமானுக்கு நியாயத்தை விளக்கிக் காண்பித்தோம். மலைகளையும் பறவைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருடன் அல்லாஹ்வை தஸ்பீஹ் (துதி) செய்தன. நாமேதான் இவற்றை எல்லாம் செய்தோம்.