caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anbiyaa அத்தியாயம், வசனம் 81

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 73 · 21:81

وَلِسُلَيْمَٰنَ ٱلرِّيحَ عَاصِفَةً تَجْرِى بِأَمْرِهِۦٓ إِلَى ٱلْأَرْضِ ٱلَّتِى بَٰرَكْنَا فِيهَا وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عَٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகடுமையாக வீசக்கூடிய காற்றை ஸுலைமானுக்கு (நாம் வசப்படுத்தினோம்) அவருடைய (-ஸுலைமானுடைய) கட்டளையின்படி அது நாம் அருள்வளம் புரிந்த பூமியின் பக்கம் (ஸுலைமானையும் அவருடைய படையையும் சுமந்து) செல்லும். எல்லாவற்றையும் அறிந்தவர்களாக நாம் இருந்தோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், விரைவாக வீசக்கூடிய காற்றை சுலைமானுக்கு நாம் வசப்படுத்தினோம். அவருடைய கட்டளையின்படி நாம் அருள்புரிந்த பூமிக்கு அது (சுலைமானையும் அவருடைய படையையும் சுமந்து) செல்லும். இன்னும், நாம் எல்லாவற்றையும் அறிந்தவர்களாக இருந்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi81. ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம்பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச்செல்லும் எல்லா விஷயங்களையும் நாம் அறிந்திருந்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70