ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِٱلْغَيْبِ وَهُم مِّنَ ٱلسَّاعَةِ مُشْفِقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள்) எ(ப்படிப்பட்ட)வர்கள் என்றால் தங்கள் இறைவனை மறைவில் (-இவ்வுலக வாழ்க்கையில்) பயப்படுவார்கள். இன்னும் அவர்கள் மறுமையைப் பற்றி அஞ்சுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஅ(ந்த இறையச்சமுள்ள)வர்கள் தங்கள் இறைவனை மறைவில் (-இவ்வுலக வாழ்க்கையில்) பயப்படுவார்கள். இன்னும், அவர்கள் மறுமையை குறித்து (எச்சரிக்கையுடன்) அச்சப்படுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi49. (இறையச்சமுடையவர்கள்) தங்கள் இறைவனைத் தங்கள் கண்ணால் பார்க்காவிடினும் அவனுக்குப் பயப்படுவதுடன், மறுமையைப் பற்றியும் அவர்கள் (எந்நேரமும் பயந்து) நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.