وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَىٰ وَهَٰرُونَ ٱلْفُرْقَانَ وَضِيَآءً وَذِكْرًا لِّلْمُتَّقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக பிரித்தறிவிக்கக்கூடிய (சத்தியத்)தையும் வெளிச்சத்தையும் (-வேதத்தையும்) இறையச்சமுள்ளவர்களுக்குரிய அறிவுரையையும் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் நாம் கொடுத்தோம்.
Tamil Translation - Omar Sharifஇறையச்சமுள்ளவர்கள் பயன் பெறுவதற்காக பிரித்தறிவிக்கக்கூடிய (சத்தியத்)தையும் வெளிச்ச(மிக்க வேத)த்தையும் அறிவுரையையும் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் திட்டவட்டமாக நாம் கொடுத்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi48. மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதத்தையே நாம் கொடுத்திருந்தோம். அதை பிரகாசமாகவும், இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் ஆக்கினோம்.