caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 85

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:85

ثُمَّ أَنتُمْ هَٰٓؤُلَآءِ تَقْتُلُونَ أَنفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًا مِّنكُم مِّن دِيَٰرِهِمْ تَظَٰهَرُونَ عَلَيْهِم بِٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ وَإِن يَأْتُوكُمْ أُسَٰرَىٰ تُفَٰدُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ ٱلْكِتَٰبِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَآءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْىٌ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ يُرَدُّونَ إِلَىٰٓ أَشَدِّ ٱلْعَذَابِ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இவ்வாறு உறுதிப்படுத்திய) ஓ இவர்களே! பிறகு நீங்கள் உங்(கள் மக்)களைக் கொல்கிறீர்கள்; உங்களில் ஒரு பிரிவினரை அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் உதவுகிறீர்கள்; கைதிகளாக உங்களிடம் அவர்கள் வந்தால் அவர்களை ஈடுகொடுத்து மீட்கிறீர்கள். அவர்களை (அவர்களின் இல்லங்களிலிருந்து) வெளியேற்றுவதோ உங்கள் மீது தடுக்கப்பட்டதாகும். நீங்கள் வேதத்தில் சிலவற்றை நம்பிக்கை கொண்டு, சிலவற்றை நிராகரிக்கிறீர்களா? உங்களில் அதைச் செய்பவர்களின் கூலி இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர (வேறு) இல்லை. மறுமை நாளிலோ, (அவர்கள்) மிகக் கடுமையான வேதனையின் பக்கம் திருப்பப்படுவார்கள். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
Tamil Translation - Omar Sharif(இவ்வாறு ஒப்பந்தத்தை நீங்கள் உறுதிப்படுத்திய) பிறகு, நீங்கள் உங்(கள் மக்)களைக் கொல்கிறீர்கள். இன்னும், உங்களில் ஒரு பிரிவினரை அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் உதவுகிறீர்கள். ஆனால், அவர்கள் கைதிகளாக உங்களிடம் வந்தால் மீட்புத் தொகை கொடுத்து அவர்களை மீட்கிறீர்கள். அவர்களை (அவர்களின் இல்லங்களிலிருந்து) வெளியேற்றுவதோ உங்கள் மீது தடுக்கப்பட்டதாகும். நீங்கள் வேதத்தில் சிலவற்றை நம்பிக்கை கொண்டு, சிலவற்றை நிராகரிக்கிறீர்களா? ஆக, உங்களில் அ(த்தகைய காரியத்)தைச் செய்பவர்களின் கூலி இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர (வேறு) இல்லை. மறுமை நாளிலோ, (அவர்கள்) மிகக் கடுமையான தண்டனையின் பக்கம் மீண்டும் கொண்டு வரப்படுவார்கள். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi85. இவ்வாறு உறுதிப்படுத்திய பின்னரும் நீங்கள் உங்(கள் மனிதர்)களைக் கொலை செய்து விடுகிறீர்கள். உங்களில் பலரை அவர்களின் இல்லங்களில் இருந்தும் வெளியேற்றி விடுகிறீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் (அவர்களுடைய எதிரிகளுக்கு) நீங்கள் உதவியும் செய்கிறீர்கள். (ஆனால், நீங்கள் வெளியேற்றிய) அவர்கள் (எதிரிகளின் கையில் சிக்கிக்) கைதிகளாக உங்களிடம் (உதவிதேடி) வந்துவிட்டாலோ அவர்களுக்காக நீங்கள் (பொருளை) ஈடுகொடுத்து (அவர்களை மீட்டு) விடுகிறீர்கள். ஆனால், அவர்களை அவர்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றுவதும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. (இவ்வாறு செய்யும்) நீங்கள் வேதத்தில் (உள்ள) சில கட்டளைகளை நம்பிக்கைகொண்டு, சில கட்டளைகளை நிராகரிக்கிறீர்களா? உங்களில் எவர்கள் இவ்வாறு செய்கிறார்களோ அவர்களுக்கு இவ்வுலகத்தில் இழிவைத் தவிர (வேறொன்றும்) கிடைக்காது. மறுமையிலோ, (அவர்கள்) கடுமையான வேதனையின் பக்கம் விரட்டப்படுவார்கள். உங்கள் இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70