فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ ٱلْكِتَٰبَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنْ عِندِ ٱللَّهِ لِيَشْتَرُوا۟ بِهِۦ ثَمَنًا قَلِيلًا فَوَيْلٌ لَّهُم مِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَّهُم مِّمَّا يَكْسِبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதங்கள் கரங்களால் (கற்பனையாக) புத்தகத்தை எழுதி, பிறகு அதைக் கொண்டு சொற்பக் கிரயத்தை வாங்குவதற்காக "இது அல்லாஹ்விடமிருந்து (வந்த வேதம்)" என்று கூறுபவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களின் கரங்கள் எழுதியதினாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் சம்பாதிப்பதினாலும் அவர்களுக்குக் கேடுதான்!
Tamil Translation - Omar Sharifஆகவே, தங்கள் கரங்களால் (கற்பனையாக) புத்தகத்தை எழுதி, பிறகு அதைக் கொண்டு சொற்பக் கிரயத்தை வாங்குவதற்காக, “இது அல்லாஹ்விடமிருந்து (வந்த வேதமாகும்)” என்று கூறுபவர்களுக்குக் கேடுதான்! ஆக, அவர்களின் கரங்கள் எதை எழுதியதோ அதனால் அவர்களுக்குக் கேடுதான்! இன்னும், அவர்கள் (இதன் மூலம்) எதை சம்பாதிக்கிறார்களோ அதனாலும் அவர்களுக்குக் கேடுதான்!
Tamil Translation - Abdulhamid Baqawi79. எவர்கள் தங்கள் கைகளைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய புத்தகத்தை ஒரு சொற்பக்கிரயத்தை அடைவதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான்'' என்று கூறுகிறார்களோ அவர்களுக்குக் கேடுதான்! (அதை) அவர்களுடைய கைகள் எழுதியதனாலும் அவர்களுக்குக் கேடுதான்! அவர்கள் (அதைக்கொண்டு பொருள்) சம்பாதிப்பதாலும் அவர்களுக்குக் கேடுதான்!