caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 80

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:80

وَقَالُوا۟ لَن تَمَسَّنَا ٱلنَّارُ إِلَّآ أَيَّامًا مَّعْدُودَةً قُلْ أَتَّخَذْتُمْ عِندَ ٱللَّهِ عَهْدًا فَلَن يُخْلِفَ ٱللَّهُ عَهْدَهُۥٓ أَمْ تَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"எண்ணப்பட்ட (சில) நாள்களைத் தவிர, நரக நெருப்பு எங்களை அறவே தீண்டாது" எனக் கூறினர். (அதற்கு நபியே) கூறுவீராக: அல்லாஹ்விடம் (அவ்வாறு ஏதேனும்) ஓர் உறுதிமொழியை (நீங்கள்) எடுத்துக் கொண்டீர்களா? (அப்படியெனில்) அல்லாஹ் தன் உறுதிமொழியை மாற்றவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுகிறீர்களா?
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “எண்ணப்பட்ட (சில) நாட்களைத் தவிர, நரக நெருப்பு எங்களை அறவே தீண்டாது.” (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்விடம் (அவ்வாறு ஏதேனும்) ஓர் உடன்படிக்கையை (நீங்கள்) ஏற்படுத்திக் கொண்டீர்களா? (அப்படியெனில்) அல்லாஹ் தன் உறுதிமொழியை அறவே மாற்ற மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுகிறீர்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi80. ‘‘ஒரு சில நாள்களுக்கேத் தவிர நரக நெருப்பு எங்களைத் தீண்டவே செய்யாது'' என அவர்கள் கூறுகிறார்கள். (அதற்கு நபியே! அவர்களை) கேட்பீராக: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் உறுதிமொழியை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் தன் வாக்கு மாறமாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) சொல்கிறீர்களா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70