caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 78

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:78

وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ ٱلْكِتَٰبَ إِلَّآ أَمَانِىَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகல்வி இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வீண் நம்பிக்கைகளைத் தவிர வேதத்தை (அவர்கள்) அறியமாட்டார்கள். அவர்கள் (வீணாகச்) சந்தேகிக்கிறார்களே தவிர (வேறு கல்வி அவர்களுக்கு) இல்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் அவர்களில் உண்டு. வீண் நம்பிக்கைகளைத் தவிர வேதத்(தில் உள்ள)தை அவர்கள் அறியமாட்டார்கள். இன்னும் அவர்கள் (வீணாகச்) சந்தேகிக்கிறார்களே தவிர (உறுதியான கல்வியறிவு அவர்ளுக்கு) இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi78. மேலும், கல்வி அறிவு இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வேதத்தைப் பற்றி (கேள்விப்பட்டுள்ள) வீண் நம்பிக்கைகளைத் தவிர (உண்மையை) அவர்கள் அறியவே மாட்டார்கள். அவர்கள் வீண் சந்தேகத்தில் (ஆழ்ந்து) கிடப்பவர்களைத் தவிர (வேறு) இல்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70