وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَٰٓئِكَةِ إِنِّى جَاعِلٌ فِى ٱلْأَرْضِ خَلِيفَةً قَالُوٓا۟ أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ ٱلدِّمَآءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّىٓ أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை படைக்கப்போகிறேன்" என உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். "அதில் விஷமம் செய்து, இரத்தங்களைச் சிந்தக்கூடியவர்களை அதில் நீ படைக்கிறாயா? நாங்களோ உன் புகழைத் துதிக்கிறோம்; உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறோம்" என்று கூறினார்கள். "நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும் (நபியே!) “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை படைக்கப்போகிறேன்” என உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக. (அதற்கு) அவர்கள் கூறினார்கள்: “அதில் விஷமம் செய்து, அதிகமாக இரத்தம் சிந்தக் கூடியவர்களை அதில் நீ படைக்(கப் போ)கிறாயா? நாங்களோ உன்னைப் புகழ்ந்து துதித்து வருகிறோம். இன்னும், உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறோம்.” (அதற்கு) அவன் கூறினான்: “நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் அறிவேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi30. (நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி “நான் பூமியில் (என்) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகின்றன்'' எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் “(பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன் பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன் பரிசுத்தத் தன்மையைக்கூறி உன் புகழைக்கொண்டு உன்னைப் புகழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவன் “நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்'' எனக் கூறிவிட்டான்.