وَعَلَّمَ ءَادَمَ ٱلْأَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى ٱلْمَلَٰٓئِكَةِ فَقَالَ أَنۢبِـُٔونِى بِأَسْمَآءِ هَٰٓؤُلَآءِ إِن كُنتُمْ صَٰدِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(பொருள்களின்) பெயர்கள் எல்லாவற்றையும் ஆதமுக்கு கற்பித்தான். பிறகு, அவற்றை அந்த வானவர்கள் முன்வைத்து, "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன் எல்லா (பொருள்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்பித்தான். பிறகு, அவற்றை அந்த வானவர்களுக்கு முன் சமர்ப்பித்தான். இன்னும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi31. பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்து, அவற்றை அந்த வானவர்களுக்கு முன்பாக்கி “(வானவர்களே! ஆதமுக்கு என் பிரதிநிதியாக ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே! இதில்) நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் (இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்'' எனக் கூறினான்.