هُوَ ٱلَّذِى خَلَقَ لَكُم مَّا فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ ٱسْتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ فَسَوَّىٰهُنَّ سَبْعَ سَمَٰوَٰتٍ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் பூமியிலுள்ளவற்றை உங்களுக்காகப் படைத்தான். பிறகு, வானத்தின் மேல் (தனது கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்தான். அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். அவன் எல்லாப் பொருளையும் நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பிறகு, வானத்திற்கு மேல் (தனது கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்தான். ஆக, அவற்றை ஏழு வானங்களாக அவன் அமைத்தான். அவன் எல்லாப் பொருளையும் நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பிறகு, அவன் வானத்திற்கு மேல் (தன் தகுதிக்குத் தக்கவாறு) உயர்ந்து அதை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும், (அவற்றிலும் அகிலத்திலும் உள்ள) அனைத்தையும் அவன் நன்கறிந்தவன் ஆவான்.