caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 217

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:217

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلشَّهْرِ ٱلْحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ وَصَدٌّ عَن سَبِيلِ ٱللَّهِ وَكُفْرٌۢ بِهِۦ وَٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِۦ مِنْهُ أَكْبَرُ عِندَ ٱللَّهِ وَٱلْفِتْنَةُ أَكْبَرُ مِنَ ٱلْقَتْلِ وَلَا يَزَالُونَ يُقَٰتِلُونَكُمْ حَتَّىٰ يَرُدُّوكُمْ عَن دِينِكُمْ إِنِ ٱسْتَطَٰعُوا۟ وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِۦ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُو۟لَٰٓئِكَ حَبِطَتْ أَعْمَٰلُهُمْ فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَأُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ هُمْ فِيهَا خَٰلِدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இந்த) புனித மாதம் அதில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அதில் போர் புரிவது (பாவத்தால்) பெரியதாகும். அல்லாஹ்வுடைய பாதை இன்னும் அல்மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பதும், அவனை (அல்லாஹ்வை) நிராகரிப்பதும், அதில் வசிப்போரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (பாவத்தால் அதைவிட) மிகப்பெரியதாகும்." இணைவைத்தல் (பாவத்தால்) கொலையைவிட மிகப் பெரியதாகும். அவர்கள் சக்தி பெற்றால் உங்களை உங்கள் மார்க்கத்தைவிட்டு அவர்கள் திருப்பிவிடும் வரை உங்களிடம் ஓயாது போர் புரிந்து கொண்டே இருப்பார்கள். உங்களில் எவர்கள் தமது மார்க்கத்தை விட்டு மாறி அவர்கள் நிராகரிப்பாளர்களாகவே இறந்துவிட்டால், அவர்களின் (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.
Tamil Translation - Omar Sharif(இந்த) புனித மாதம், அதில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “அதில் போர் புரிவது (பாவத்தால்) பெரியதாகும். அல்லாஹ்வுடைய பாதை இன்னும் அல்மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பதும், அவனை (-அல்லாஹ்வை) நிராகரிப்பதும், அதில் வசிப்போரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (புனித மாதத்தில் போர் செய்வதை விட பாவத்தால்) மிகப்பெரியதாகும். (அல்லாஹ்விற்கு) இணைவைப்பது(ம் அவனை நிராகரிப்பதும் பாவத்தால்) கொலையை விட மிகப் பெரியதாகும்.” அவர்களால் முடியுமேயானால் உங்களை உங்கள் மார்க்கத்தை விட்டு அவர்கள் மாற்றிவிடும் வரை உங்களிடம் ஓயாது போர் புரிந்து கொண்டே இருப்பார்கள். உங்களில் எவர்கள் தமது மார்க்கத்தை விட்டு மாறி - அவர்களோ நிராகரிப்பாளர்களாகவே - இறந்துவிட்டால், அவர்களின் (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi217. (நபியே! துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய இச்)சிறப்புற்ற மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் அ(ந்நிராகரிப்பவர்கள் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அவற்றில் போர் புரிவது பெரும் பாவம்(தான்). ஆனால், அல்லாஹ்வுடைய மார்க்கத்(தில் சேருவ)தை விட்டு மக்களை (நீங்கள்) தடுப்பதும், அல்லாஹ்வை நீங்கள் நிராகரிப்பதும், (ஹஜ்ஜூக்கு வருபவர்களை) மஸ்ஜிதுல் ஹராமுக்கு வரவிடாது தடுப்பதும், அதில் வசிப்போ(ரில் நம்பிக்கை கொண்டோ)ரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (அதைவிட) மிகப் பெரும் பாவங்களாக இருக்கின்றன. தவிர, (நம்பிக்கையாளர்களுக்கு நீங்கள் செய்துவரும்) விஷமம் கொலையைவிட மிகக் கொடியது. மேலும், (நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களாகிய) அவர்களுக்குச் சாத்தியப்பட்டால் உங்களை உங்கள் மார்க்கத்திலிருந்து திருப்பி விடும்வரை உங்களை எதிர்த்து ஓயாது போர் செய்து கொண்டே இருப்பார்கள். ஆகவே, உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தை (நிராகரித்து)விட்டு மாறி, (அதை அவ்வாறு) நிராகரித்(ததைப் பற்றி வருத்தப்பட்டு மீளா)தவராகவே இறந்துவிட்டால் அவருடைய (நற்)செயல்கள் எல்லாம் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். இன்னும், அவர்கள் நரகவாசிகளாகி, என்றென்றுமே அதில் தங்கி விடுவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70