كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ وَعَسَىٰٓ أَن تَكْرَهُوا۟ شَيْـًٔا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعَسَىٰٓ أَن تُحِبُّوا۟ شَيْـًٔا وَهُوَ شَرٌّ لَّكُمْ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபோர் உங்கள் மீது கடமையாக்கப்பட்டது. அதுவோ உங்களுக்குச் சிரமமானது. நீங்கள் ஒன்றை வெறுக்கலாம்; அதுவோ உங்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் ஒன்றை விரும்பலாம்; அதுவோ உங்களுக்கு தீமையாகும். அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
Tamil Translation - Omar Sharifபோர், -அதுவோ உங்களுக்குச் சிரமமானதாக இருக்கும் நிலையில் - உங்கள் மீது கடமையாக்கப்பட்டது. நீங்கள் ஒன்றை வெறுக்கலாம், அதுவோ உங்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் ஒன்றை விரும்பலாம், அதுவோ உங்களுக்கு தீமையானதாகும். அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi216. (நம்பிக்கையாளர்களே!) போர் செய்வது உங்களுக்கு வெறுப்பாய் இருந்தும் (உங்களையும் உங்கள் மார்க்கத்தையும் காப்பதற்காக) அது உங்கள்மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது. ஒன்று உங்களுக்கு மிக நன்மையாக இருந்தும் அதை நீங்கள் வெறுக்கக்கூடும். ஒன்று உங்களுக்குத் தீங்காக இருந்தும் அதை நீங்கள் விரும்பக்கூடும். (அவை உங்களுக்கு நன்மை அளிக்குமா தீமையளிக்குமா என்பதை) அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.