سَلْ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ كَمْ ءَاتَيْنَٰهُم مِّنْ ءَايَةٍۭ بَيِّنَةٍ وَمَن يُبَدِّلْ نِعْمَةَ ٱللَّهِ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلْعِقَابِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎத்தனை தெளிவான அத்தாட்சியை அவர்களுக்குக் கொடுத்தோம் என இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக! எவர் அல்லாஹ்வின் அருட்கொடையை அது தம்மிடம் வந்த பின்னர் மாற்றுவாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவரைத்) தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களுக்குக் கொடுத்தோம் என இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக! எவர் அல்லாஹ்வின் அருட்கொடையை அது தம்மிடம் வந்த பின்னர் மாற்றுவாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவரைத்) தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi211. (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக: ‘‘எத்தனை தெளிவான அத்தாட்சிகளை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.'' (அவ்வாறிருக்க) எவரேனும் அவை தன்னிடம் வந்ததன் பின் அல்லாஹ்வின் (அத்தாட்சிகளான) அருட்கொடையை மாற்றிவிடுவாரானால் (அவரை) வேதனை செய்வதில் நிச்சயமாக அல்லாஹ் மிகக் கடுமையானவன் ஆவான்.