زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا۟ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا وَيَسْخَرُونَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ ٱتَّقَوْا۟ فَوْقَهُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَٱللَّهُ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பவர்களுக்கு உலக வாழ்க்கை அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். அல்லாஹ்வை அஞ்சியவர்கள் மறுமை நாளில் அவர்களுக்கு மேல் இருப்பார்கள். அல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்கு கணக்கின்றி வழங்குவான்.
Tamil Translation - Omar Sharifநிராகரிப்பவர்களுக்கு உலக வாழ்க்கை அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்னும், அவர்கள் நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். அல்லாஹ்வை அஞ்சியவர்கள் மறுமை நாளில் அவர்களுக்கு மேலாக (சொர்க்கத்தில்) இருப்பார்கள். அல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்கு கணக்கின்றி (தன் அருள்களை) வழங்குவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi212. நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே அலங்காரமாக(த் தோன்றும்படி) செய்யப்பட்டிருக்கிறது. ஆதலால், அவர்கள் (ஏழைகளாக இருக்கும்) நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். ஆனால், (நம்பிக்கையாளர்களான) இறையச்சம் உள்ளவர்களோ மறுமையில் அவர்களைவிட (எவ்வளவோ) மேலாக இருப்பார்கள். மேலும், அல்லாஹ் விரும்புகின்ற (இ)வர்களுக்குக் கணக்கின்றியே வழங்குவான்.