هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن يَأْتِيَهُمُ ٱللَّهُ فِى ظُلَلٍ مِّنَ ٱلْغَمَامِ وَٱلْمَلَٰٓئِكَةُ وَقُضِىَ ٱلْأَمْرُ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வும் வானவர்களும் மேகங்களின் நிழல்களில் அவர்களிடம் வருவதையும் காரியம் முடிக்கப்படுவதையும் தவிர (வேறெதையும்) எதிர்பார்க்கிறார்களா? காரியங்கள் அல்லாஹ்வின் பக்கமே திருப்பப்படும்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் மேகங்களின் நிழல்களில் அவர்களிடம் வருவதையும் இன்னும் வானவர்கள் வருவதையும் (அவர்களின்) காரியம் முடிக்கப்படுவதையும் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? காரியங்கள் எல்லாம் (முடிவில்) அல்லாஹ்வின் பக்கமே திருப்பப்படும்.
Tamil Translation - Abdulhamid Baqawi210. (நபியே! இவ்வளவு தெளிவான வசனங்களை நிராகரிக்கின்ற அவர்கள்) அல்லாஹ்வும் வானவர்களும் (வெண்) மேகத்தின் நிழலில் அவர்களிடம் வந்து (அவர்களை அழித்து) அவர்களின் வேலையை முடிப்பதைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரோ? (அவர்களுடைய) எல்லா விஷயங்களும் (மறுமையில்) அல்லாஹ்விடமே (விசாரணைக்குக்) கொண்டுவரப்படும்.