caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 194

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:194

ٱلشَّهْرُ ٱلْحَرَامُ بِٱلشَّهْرِ ٱلْحَرَامِ وَٱلْحُرُمَٰتُ قِصَاصٌ فَمَنِ ٱعْتَدَىٰ عَلَيْكُمْ فَٱعْتَدُوا۟ عَلَيْهِ بِمِثْلِ مَا ٱعْتَدَىٰ عَلَيْكُمْ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلْمُتَّقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபுனித மாதம் புனித மாதத்திற்கு (பதிலாகும்). புனிதங்கள் (பாழ்படுத்தப் பட்டால்) பழிதீர்க்கப்பட வேண்டும். ஆகவே, யார் உங்கள் மீது வரம்பு மீறினாரோ, அவர் உங்கள் மீது வரம்பு மீறியது போன்றே (நீங்களும்) அவர் மீது வரம்பு மீறுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Omar Sharifபுனித மாதம் புனித மாதத்திற்கு பதிலாகும். புனிதங்கள் (பாதுகாக்கப்பட வேண்டும். அவை பாழ்படுத்தப்பட்டால்) பழிதீர்க்கப்பட வேண்டும். ஆகவே, யார் உங்களை தாக்குவாரோ, அவர் உங்களை தாக்கியது போன்றே (நீங்களும்) அவரை தாக்குங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi194. (போர் செய்வது தடுக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற மாதங்களுக்கு சிறப்புற்ற மாதங்களே ஈடாகும். ஆகவே, சிறப்புகளுக்கு(ச் சமமான) ஈடு உண்டு. ஆதலால், எவரேனும் உங்கள் மீது வரம்பு மீறி (அம்மாதங்களில் போருக்கு) வந்தால், அவர் வரம்பு மீறிய விதமே நீங்களும் அவர் மீது வரம்புமீறி (போருக்கு)ச் செல்லுங்கள். ஆனால், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து (அம்மாதங்களில் போரை ஆரம்பம் செய்யாது இருந்து) கொள்ளுங்கள். அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதையும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70