وَقَٰتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ ٱلدِّينُ لِلَّهِ فَإِنِ ٱنتَهَوْا۟ فَلَا عُدْوَٰنَ إِلَّا عَلَى ٱلظَّٰلِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇணைவைத்தல் நீங்கி, வழிபாடு அல்லாஹ்விற்கு ஆகும் வரை அவர்களிடம் போர் புரியுங்கள். அவர்கள் விலகிக் கொண்டால் அநியாயக்காரர்கள் மீதே தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறல் இல்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (மக்காவில்) இணைவைத்தல் நீங்கும் வரை, வணக்க வழிபாடு அல்லாஹ்விற்கு மட்டும் ஆகும் வரை அவர்களிடம் போர் புரியுங்கள். ஆக, அவர்கள் (உங்களிடம் சண்டை செய்யாமல்) விலகிக் கொண்டால் அப்போது அறவே தாக்குதல் (நிகழ்த்துவது) இல்லை, அநியாயக்காரர்கள் மீதே தவிர.
Tamil Translation - Abdulhamid Baqawi193. (இஸ்லாமிற்கு எதிராக செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் உறுதியாக நிலைபெறும் வரை அவர்களை எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகம் செய்யாது) விலகிக் கொண்டால் (அவர்களுக்கு மன்னிப்பு உண்டு). அநியாயம் செய்பவர்களைத் தவிர (மற்றவர்கள் மீது) அறவே அத்துமீறக்கூடாது.