وَٱقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُم مِّنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَٱلْفِتْنَةُ أَشَدُّ مِنَ ٱلْقَتْلِ وَلَا تُقَٰتِلُوهُمْ عِندَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ حَتَّىٰ يُقَٰتِلُوكُمْ فِيهِ فَإِن قَٰتَلُوكُمْ فَٱقْتُلُوهُمْ كَذَٰلِكَ جَزَآءُ ٱلْكَٰفِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களை நீங்கள் பார்த்த இடத்தில் அவர்களைக் கொல்லுங்கள். உங்களை அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். இணைவைத்தல் கொலையைவிட மிகக் கடுமையானது. அல்மஸ்ஜிதுல் ஹராமின் அருகில் அவர்களிடம் போர் புரியாதீர்கள், அதில் அவர்கள், உங்களிடம் போர்புரியும் வரை. அவர்கள் உங்களிடம் போரிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள். இப்படித்தான் நிராகரிப்பவர்களின் கூலி.
Tamil Translation - Omar Sharifஇன்னும் (உங்களுடன் போர் செய்யும் மக்காவாசிகளாகிய) அவர்களை நீங்கள் பார்த்த இடத்தில் கொல்லுங்கள். உங்களை அவர்கள் (மக்காவிலிருந்து) வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை (மக்காவிலிருந்து) வெளியேற்றுங்கள். இணைவைத்தல் கொலையை விட மிகக் கடுமையானது. (மக்காவில்) புனித மஸ்ஜிதுக்கு அருகில் அவர்களிடம் போர் புரியாதீர்கள், அதில் அவர்கள், உங்களிடம் போர்புரியும் வரை. ஆக, அவர்கள் உங்களிடம் போரிட்டால் அப்போது நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள். இப்படித்தான் (உங்களிடம் சண்டை செய்கிற அந்த) நிராகரிப்பவர்களின் கூலி இருக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi191. ஆகவே, (உங்களை எதிர்த்து போர்புரிய முற்பட்ட) அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள். உங்களை (உங்கள் ஊரிலிருந்து) அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றி விடுங்கள். (அவர்கள் செய்யும்) கலகம் கொலையைவிட மிகக் கொடியது. ஆனால், (அவர்களில்) எவரேனும் அபயம் தேடி மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தால், அங்கு அவர்கள் உங்களை எதிர்த்து போர்புரிய முற்படும்வரை நீங்கள் அவர்களை வெட்டாதீர்கள். (அவ்விடத்திலும்) அவர்கள் உங்களை எதிர்த்து போர் புரிந்தால் நீங்களும் அவர்களை வெட்டுங்கள். (அந்த) நிராகரிப்பவர்களுக்கு (உரிய) கூலி இப்படித்தான்!