وَقَٰتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يُقَٰتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوٓا۟ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களிடம் போர் புரிவோரிடம் அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் போர் புரியுங்கள். வரம்பு மீறாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும் (மக்காவாசிகளில்) உங்களிடம் போர் புரிவோரிடம் அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் போர் புரியுங்கள். ஆனால், வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi190. உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் அத்துமீறாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை.