caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 189

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:189

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلْأَهِلَّةِ قُلْ هِىَ مَوَٰقِيتُ لِلنَّاسِ وَٱلْحَجِّ وَلَيْسَ ٱلْبِرُّ بِأَن تَأْتُوا۟ ٱلْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَٰكِنَّ ٱلْبِرَّ مَنِ ٱتَّقَىٰ وَأْتُوا۟ ٱلْبُيُوتَ مِنْ أَبْوَٰبِهَا وَٱتَّقُوا۟ ٱللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: "அவை மக்களுக்கும் ஹஜ்ஜுக்கும் காலங்களை அறிவிக்கக்கூடியவை." நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் பின்வழிகளில் இருந்து வருவது நன்மை இல்லை. எனினும், நன்மை அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்(களில்)தான் இருக்கிறது. நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்களில் இருந்து வாருங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள், நீங்கள் வெற்றியடைவதற்காக.
Tamil Translation - Omar Sharif(நபியே!) அவர்கள் பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அவை மக்களு(டைய கொடுக்கல் வாங்கலு)க்கும் ஹஜ்ஜுக்கும் காலங்களை அறிவிக்கக்கூடியவை ஆகும். இன்னும், நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் பின்வாசல்கள் வழியாக வருவது நன்மை இல்லை. எனினும், நன்மை என்பது யார் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறாரோ அதுதான். ஆகவே, நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்கள் வழியாக வாருங்கள். இன்னும் நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்!”
Tamil Translation - Abdulhamid Baqawi189. (நபியே! மாதந்தோறும் பிறந்து, வளர்ந்து, தேயும்) பிறைகளைப்பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அவை மனிதர்களுக்கு ஒவ்வொரு மாதத்தையும் ஹஜ்ஜூடைய காலங்களையும் அறிவிக்கக்கூடியவை.'' மேலும், (நம்பிக்கையாளர்களே! இஹ்ராம் கட்டிய) நீங்கள் (உங்கள்) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்து விடுவதனால் நல்லவர்களாக ஆகிவிட மாட்டீர்கள். எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ அவரே நல்லவர். ஆதலால், நீங்கள் (உங்கள்) வீடுகளுக்கு அவற்றின் தலை வாசல்களின் வழியாக வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70