وَلَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَٰطِلِ وَتُدْلُوا۟ بِهَآ إِلَى ٱلْحُكَّامِ لِتَأْكُلُوا۟ فَرِيقًا مِّنْ أَمْوَٰلِ ٱلنَّاسِ بِٱلْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களுக்கு மத்தியில் உங்கள் செல்வங்களைத் தவறாக உண்ணாதீர்கள் (அனுபவிக்காதீர்கள்). நீங்கள் (பாவம் என்று) அறிந்திருந்தும் மக்களுடைய செல்வங்களில் ஒரு பகுதியைப் பாவமாக நீங்கள் உண்பதற்காக அவற்றை அதிகாரிகளிடம் (லஞ்சமாக) கொடுக்காதீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களுக்கு மத்தியில் உங்கள் செல்வங்களைத் தவறாக (பாவமாக) உண்ணாதீர்கள் (அனுபவிக்காதீர்கள்). நீங்கள் (செய்வது பாவம் என்று) அறிந்திருந்தும் மக்களுடைய செல்வங்களில் ஒரு பகுதியை தவறாக நீங்கள் உண்பதற்காக (-அனுபவிப்பதற்காக) அவற்றை அதிகாரிகளிடம் (லஞ்சமாக) கொடுக்காதீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi188. (மேலும்,) உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் வாதம் பொய்யானதென) நீங்கள் அறிந்திருந்தும் (இதர) மனிதர்களின் பொருள்களில் எதையும் பாவமான வழியில் (அநியாயமாக லஞ்சம் கொடுத்து) அபகரித்துக்கொள்ள அதிகாரிகளிடம் செல்லாதீர்கள்.