أَيَّامًا مَّعْدُودَٰتٍ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى ٱلَّذِينَ يُطِيقُونَهُۥ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَن تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُۥ وَأَن تَصُومُوا۟ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎண்ணப்பட்ட (ரமழான் மாத) நாட்களில் (நோன்பிருத்தல் கடமையாகும்). உங்களில் நோயாளியாக அல்லது பிரயாணத்தில் (பயணியாக) இருந்தவர் மற்ற நாட்களில் (விடுபட்ட நாட்களை) கணக்கிடவும். அதற்கு சிரமப்படுபவர்கள் மீது ஓர் ஏழையின் உணவு பரிகாரம் (கொடுத்தல்) கடமையாகும். எவர் நன்மையை உபரியாகச் செய்வாரோ அது அவருக்கு நன்மை. நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
Tamil Translation - Omar Sharif(ஓர் ஆண்டில் ரமழான் மாதம் என்று) எண்ணப்பட்ட நாட்களில் (நோன்பிருத்தல் கடமையாகும்). ஆக, உங்களில் யார் நோயாளியாக இருப்பாரோ, அல்லது பயணத்தில் இருப்பாரோ அவர் (விடுபட்ட நோன்புகளை) மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு வைக்கவும். அ(ந்த மாதத்தில் நோன்பு நோற்பதான)து யாருக்கு சிரமமாக இருக்குமோ அவர்கள் கட்டாயம் ஓர் ஏழைக்கு (ஒரு வேளை) உணவளிப்பது (நோன்பை விட்டதற்கு) பரிகாரம் ஆகும். ஆக, எவர் நன்மையான அமலை விருப்பமாக செய்வாரோ அது அவருக்கு நன்மையாகும். ஆனால், நீங்கள் (நோன்பின் நன்மையை) அறிந்தவர்களாக இருந்தால் (சிரமத்தை தாங்கிக் கொண்டு) நோன்பு நோற்பதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் (என்பதை அறிந்து கொள்வீர்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi184. குறிப்பிட்ட நாள்களில்தான் (நோன்பு நோற்பது கடமையாகும்.) ஆயினும் (அந்நாள்களில்) உங்களில் யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (அவர் நோன்பு நோற்க வேண்டியதில்லை. அதை ரமழான் அல்லாத) மற்ற நாள்களில் கணக்கி(ட்டு நோற்று வி)டவும். தவிர, (ஏதாவது ஒரு காரணத்தினால்) நோன்பு நோற்க சிரமப்படுபவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். எவரேனும் நன்மையை நாடி (பரிகாரத்திற்குரிய அளவைவிட அதிகமாகத்) தானம் செய்தால் அது அவருக்கே நன்மை. ஆயினும், (பரிகாரமாகத் தானம் கொடுப்பதை விட நோன்பின் நன்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது (என்பதை தெரிந்து கொள்வீர்கள்).