caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 133

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:133

أَمْ كُنتُمْ شُهَدَآءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ ٱلْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنۢ بَعْدِى قَالُوا۟ نَعْبُدُ إِلَٰهَكَ وَإِلَٰهَ ءَابَآئِكَ إِبْرَٰهِـۧمَ وَإِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ إِلَٰهًا وَٰحِدًا وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(யூதர்களே!) யஅகூபுக்கு மரணம் வந்தபோது (நீங்கள் அங்கு) சாட்சிகளாக இருந்தீர்களா? அவர் தன் பிள்ளைகளை நோக்கி, "எனக்குப் பின்னர் யாரை வணங்குவீர்கள்?" எனக் கூறியபோது (அவர்கள்) கூறினார்கள்: "நாம் உம் கடவுளை, இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய உம் மூதாதைகளின் கடவுளை - ஒரே ஒரு கடவுளை - வணங்குவோம். நாங்கள் அவனுக்கு -(முற்றிலும் பணிந்தவர்கள்)- முஸ்லிம்கள் ஆவோம்."
Tamil Translation - Omar Sharif(யூதர்களே!) யஅகூபுக்கு மரணம் வந்தபோது (நீங்கள் அங்கு) சாட்சிகளாக இருந்தீர்களா? அவர் தமது பிள்ளைகளை நோக்கி, “எனக்குப் பின்னர் யாரை வணங்குவீர்கள்?” எனக் கூறியபோது (அவர்கள்) கூறினார்கள்: “நாம் உமது கடவுளை, இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய உமது மூதாதைகளின் கடவுளை - ஒரே ஒரு கடவுளை - வணங்குவோம். நாங்கள் அவனுக்கு - முற்றிலும் பணிந்த முஸ்லிம்களாக இருப்போம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi133. (யூதர்களே!) யஅகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (அவருக்கு) அருகாமையில் இருந்தீர்களா? அவர் தன் சந்ததிகளை நோக்கி ‘‘எனக்குப் பின்னர் எதை வணங்குவீர்கள்?'' எனக் கேட்டதற்கு ‘‘உமது இறைவனும், உமது மூதாதைகளான இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் இறைவனுமான ஒரே ஓர் இறைவனையே வணங்குவோம். அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்ட முஸ்லிம்களாகவே இருப்போம்'' என்றே கூறினார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70