caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 132

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:132

وَوَصَّىٰ بِهَآ إِبْرَٰهِـۧمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَٰبَنِىَّ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇப்ராஹீமும், யஅகூபும் அதையே தன் பிள்ளைகளுக்கு உபதேசித்தார்கள்: "என் பிள்ளைகளே! நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்காக (இஸ்லாம்) மார்க்கத்தை தேர்ந்தெடுத்தான். எனவே, நீங்கள் முஸ்லிம்களாக இருக்கவே தவிர கண்டிப்பாக நீங்கள் மரணித்து விடாதீர்கள்."
Tamil Translation - Omar Sharifஇன்னும், இப்ராஹீமும், யஅகூபும் (அகிலங்களின் இறைவனுக்கு பணிந்து முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற) அ(ந்த உபதேசத்)தையே தமது பிள்ளைகளுக்கு உபதேசித்தார்கள். “என் பிள்ளைகளே! நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்காக (இஸ்லாமிய) மார்க்கத்தை தேர்ந்தெடுத்தான். ஆகவே, ஒருபோதும் நீங்கள் மரணித்து விடாதீர்கள், நீங்கள் முஸ்லிம்களாக இருக்கும் நிலையில் தவிர.”
Tamil Translation - Abdulhamid Baqawi132. அதையே இப்றாஹீம் தன் சந்ததிகளுக்கும் உபதேசித்தார். யஅகூபும் (தன் சந்ததிகளை நோக்கி) ‘‘என் சந்ததிகளே! உங்களுக்காக அல்லாஹ் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்திருக்கிறான். ஆதலால், நீங்கள் உண்மையான முஸ்லிம்களாகவே தவிர இறந்துவிட வேண்டாம்'' (என்றே கூறினார்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70