caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 118

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:118

وَقَالَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا ٱللَّهُ أَوْ تَأْتِينَآ ءَايَةٌ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ مِن قَبْلِهِم مِّثْلَ قَوْلِهِمْ تَشَٰبَهَتْ قُلُوبُهُمْ قَدْ بَيَّنَّا ٱلْـَٔايَٰتِ لِقَوْمٍ يُوقِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅறியாதவர்கள், "அல்லாஹ் நம்முடன் பேச வேண்டாமா? அல்லது ஒரு வசனம் நமக்கு வரவேண்டாமா?" எனக் கூறினார்கள். இப்படியே இவர்களுக்கு முன்னர் உள்ளவர்களும் இவர்களின் கூற்றைப் போன்றே கூறினார்கள். இவர்களுடைய உள்ளங்கள் (அனைத்தும் ஒன்றுக்கொன்று) ஒப்பாகிவிட்டன. (உண்மையை) உறுதி கொள்ளும் சமுதாயத்திற்கு வசனங்களை திட்டமாகத் தெளிவாக்கினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (வேதத்தை) அறியாதவர்கள், “அல்லாஹ் எங்களுடன் பேச வேண்டாமா? அல்லது, ஒரு வசனம் எங்களுக்கு வரவேண்டாமா?” என்று கூறினார்கள். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இவர்களின் கூற்றைப் போன்றே கூறினார்கள். இவர்களுடைய உள்ளங்கள் (அனைத்தும்) ஒன்றுக்கொன்று ஒப்பாகி (ஒரே மாதிரி) இருக்கின்றன. (உண்மையை) உறுதியாக நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு வசனங்களை திட்டமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi118. மேலும், கல்வி (அறிவு) இல்லாதோர் ‘‘அல்லாஹ் நம்முடன் (நேரடியாகப்) பேச வேண்டாமா? அல்லது (எழுதப்பட்ட) ஒரு வசனம் (நேராக) நமக்கு வரவேண்டாமா?'' எனக் கேட்கின்றனர். இவர்கள் கேட்டது போன்றே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (மூஸாவிடம்) கேட்டார்கள். (அவர்களுடைய உள்ளங்களை) இவர்களுடைய உள்ளங்கள் ஒத்திருக்கிறேன். (உண்மையை) நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நம் அத்தாட்சிகளை நிச்சயமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70