إِنَّآ أَرْسَلْنَٰكَ بِٱلْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَلَا تُسْـَٔلُ عَنْ أَصْحَٰبِ ٱلْجَحِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும் உண்மையைக் கொண்டு அனுப்பினோம். நரகவாசிகளைப் பற்றி (நீர்) விசாரிக்கப்பட மாட்டீர்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை உண்மையான மார்க்கத்துடன் (அதை ஏற்பவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும், (அதை நிராகரிப்பவர்களை) எச்சரிப்பவராகவும் அனுப்பினோம். இன்னும் நரகவாசிகளைப் பற்றி (நீர்) விசாரிக்கப்படமாட்டீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi119. (நபியே! நன்மை செய்பவர்களுக்கு) இவ்வேதத்தின் மூலம் நீர் நற்செய்தி கூறுபவராகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் (மட்டுமே) நிச்சயமாக நாம் உம்மை அனுப்பி வைத்திருக்கிறோம். ஆகவே, (அவர்கள் உமது சொல்லை நிராகரித்து நரகம் சென்றால், அந்)நரகவாசிகளைப் பற்றி நீர் கேட்கப்படமாட்டீர்.