يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَقُولُوا۟ رَٰعِنَا وَقُولُوا۟ ٱنظُرْنَا وَٱسْمَعُوا۟ وَلِلْكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) "ராஇனா" என்று கூறாதீர்கள். "உன்ளுர்னா" என்று கூறுங்கள். (நபியின் கூற்றை முழுமையாகச்) செவிமடுங்கள். நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய வேதனை உண்டு.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) “ராஇனா” என்று கூறாதீர்கள். மாறாக, “உன்ளுர்னா” என்று கூறுங்கள். (நபியின் கூற்றை கவனமாக) செவியுறுங்கள். நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய தண்டனை உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi104. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) ‘ராயினா' எனக் கூறாதீர்கள். (அதற்குப் பதிலாக ‘‘எங்களைப் பாருங்கள்!' என்ற பொருளைத் தரும்) ‘‘உன்ளுர்னா'' எனக் கூறுங்கள். (மேலும், நபி கூறுவதை முழுமையாக) செவிமடுங்கள். (இதற்கு மாறாகக் கூறும்) நிராகரிப்பவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனை உண்டு.