caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 105

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:105

مَّا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ وَلَا ٱلْمُشْرِكِينَ أَن يُنَزَّلَ عَلَيْكُم مِّنْ خَيْرٍ مِّن رَّبِّكُمْ وَٱللَّهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِۦ مَن يَشَآءُ وَٱللَّهُ ذُو ٱلْفَضْلِ ٱلْعَظِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்களே!) வேதக்காரர்கள் இன்னும் இணைவைப்பவர்கள் ஆகிய நிராகரிப்பாளர்கள் (தங்களிடம் உள்ளதைவிட) சிறந்தது எதுவும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள். அல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்குத் தன் கருணையைச் சொந்தமாக்குகிறான். அல்லாஹ் பெரும் அருளுடையவன்.
Tamil Translation - Omar Sharif(நம்பிக்கையாளர்களே!) வேதக்காரர்கள் இன்னும் இணைவைப்பவர்கள் ஆகிய நிராகரிப்பாளர்கள் (தங்களிடம் உள்ளதை விட) சிறந்தது எதுவும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள். என்றாலும், அல்லாஹ் - தான் நாடுகிறவர்களுக்குத் தனது கருணையை - விசேஷமாக வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi105. (நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்கு பவர்களிலும் உள்ள (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்கள் (தங்களிடம் உள்ளதைவிட) சிறந்த ஒன்று உங்கள் இறைவனால் உங்கள் மீது அருளப்படுவதை விரும்பவே மாட்டார்கள். ஆனால், அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்குத் தன் கருணையை சொந்தமாக்கி விடுகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70