وَقُل لِّعِبَادِى يَقُولُوا۟ ٱلَّتِى هِىَ أَحْسَنُ إِنَّ ٱلشَّيْطَٰنَ يَنزَغُ بَيْنَهُمْ إِنَّ ٱلشَّيْطَٰنَ كَانَ لِلْإِنسَٰنِ عَدُوًّا مُّبِينًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) என் அடியார்களுக்கு கூறுவீராக! மிக அழகியதை அவர்கள் கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீய சொற்களால்) குழப்பம் (இன்னும் கெடுதி) செய்வான். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு தெளிவான எதிரியாக இருக்கின்றான்.
Tamil Translation - Omar Sharifமேலும், (நபியே!) என் அடியார்களுக்கு கூறுவீராக: “அவர்கள் (தங்களுக்குள்) மிக அழகியதை பேசவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (அவர்கள் பேசும் தீய சொற்களால்) குழப்பம் செய்வான். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு தெளிவான எதிரியாக இருக்கிறான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi53. (நபியே! எனக்கு கட்டுப்பட்ட) என் அடியார்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் (எந்த மனிதருடன் பேசியபோதிலும்) எது மிக அழகியதோ அதையே கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படி செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (ஆகவே, எச்சரிக்கையாக இருங்கள்.)