يَوْمَ يَدْعُوكُمْ فَتَسْتَجِيبُونَ بِحَمْدِهِۦ وَتَظُنُّونَ إِن لَّبِثْتُمْ إِلَّا قَلِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களை அவன் அழைக்கிற நாளில், நீங்கள் அவனுடைய ஆற்றல் கொண்டு பதில் அளிப்பீர்கள். சொற்ப (கால)ம் தவிர நீங்கள் (உலகிலும் மண்ணறையிலும்) தங்கவில்லை என்று (அந்நாளில்) எண்ணுவீர்கள்!
Tamil Translation - Omar Sharifஉங்களை அவன் அழைக்கிற நாளில், நீங்கள் அவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, எல்லாப் புகழும் அவனுக்கே என்று பதில் அளிப்பீர்கள். இன்னும், சொற்ப (கால)ம் தவிர நீங்கள் (உலகிலும் மண்ணறையிலும்) தங்கவில்லை என்று (அந்நாளில்) எண்ணுவீர்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi52. (இன்றைய தினம் நீங்கள் இறைவனை வெறுத்தபோதிலும் அவன்) உங்களை (விசாரணைக்காக) அழைக்கின்ற நாளில் நீங்கள் அவனைப் புகழ்ந்து கொண்டே அவனிடம் வருவீர்கள். (இறந்த பின்) வெகு சொற்ப(நேர)மே தவிர தங்கியிருக்கவில்லை என்றும் (அன்றைய தினம்) நீங்கள் எண்ணுவீர்கள்!