رَّبُّكُمْ أَعْلَمُ بِكُمْ إِن يَشَأْ يَرْحَمْكُمْ أَوْ إِن يَشَأْ يُعَذِّبْكُمْ وَمَآ أَرْسَلْنَٰكَ عَلَيْهِمْ وَكِيلًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(மனிதர்களே!) உங்கள் இறைவன் உங்களை மிக அறிந்தவன். அவன் நாடினால் உங்களுக்கு அருள் புரிவான் அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை செய்வான். (நபியே!) உம்மை அவர்கள் மீது (கண்காணிப்பவராக இன்னும்) பொறுப்பாளராக நாம் அனுப்பவில்லை.
Tamil Translation - Omar Sharif(மனிதர்களே!) உங்கள் இறைவன் உங்களை மிக அறிந்தவன். அவன் நாடினால் உங்கள் மீது கருணை புரிவான்; அல்லது, அவன் நாடினால் உங்களை தண்டிப்பான். (நபியே!) உம்மை அவர்கள் மீது பொறுப்பாளராக (-கண்காணிப்பாளராக) நாம் அனுப்பவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi54. (மனிதர்களே!) உங்களை உங்கள் இறைவன் நன்கறிந்தே இருக்கிறான். அவன் விரும்பினால் உங்களுக்கு அருள்புரிவான் அல்லது அவன் விரும்பினால் உங்களை வேதனை செய்வான். ஆகவே, (நபியே!) நாம் உம்மை அவர்களுக்குப் பொறுப்பாளியாக அனுப்பவில்லை.